×

வேதா இல்லம் அமைந்துள்ள நிலம், அங்குள்ள அன்னார் பொருட்களை பராமரிக்கவும், நிருவகிக்கவும் ஜெ. அறநிறுவனத்திற்கு ஒப்படைக்க நடவடிக்கை

சென்னை: வேதா இல்லம், அமைந்துள்ள நிலம் மற்றும் அங்குள்ள அன்னார் பொருட்களை பராமரிக்கவும், நிருவகிக்கவும் ஜெ ஜெயலலிதா அறநிறுவனத்திற்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வேதா நிலையம் இல்லம் அரசு நினைவிடமாக மாற்றப்படும் என முதல்வர் முன்பு அறிவித்திருந்ததை தொடர்ந்து, நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவு மறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டத்தின் (மத்திய சட்டம் 30/2013) கீழ் கையகப்படுத்தி அரசுக்கு ஒப்படைக்க சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு நிர்வாக அனுமதி அளித்து 05.10.2017-ல் அரசாணை வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து,

சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் கோரப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான உடனடி செலவினங்களுக்கு ரூ.5,25,000/-க்கு நிதியொப்பளிப்பு செய்து 04.01.2018ல் அரசாணை வெளியிடப்பட்டது. மேலும், நில எடுப்பு பணிகள் மேற்கொள்ளவும், செயல்விளைவுகள் மதிப்பீடு பணிகள் மேற்கொள்ளவும், ரூ.30,09,338/-க்கு நிதி ஒப்பளிப்பு செய்து 17.07.2018ல் அரசாணை வெளியிடப்பட்டது. சமூக தாக்க மதிப்பீட்டு முகமை நில நிர்வாக ஆணையர் அவர்களால் நியமிக்கப்பட்டு, அந்த அமைப்பின் மூலம் விரிவான ஆய்வுகள் நடத்துதல், பொதுமக்கள், பங்குதாரர்கள் மற்றும் அப்பகுதி மக்களைச் சந்தித்தல், கருத்தறிதல் மற்றும் கலந்துரையாடல்கள் நடத்துதல் ஆகிய பணிகளை முடித்து,

சமூகத் தாக்கம் குறித்த மதிப்பீட்டு அறிக்கை மற்றும் சமூகத் தாக்க வரைவு திட்ட அறிக்கை ஆகியவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயார் செய்து 14.12.2018 அன்று சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் சமர்ப்பித்துள்ளது. பொதுமக்கள், பங்குதாரர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல ஏதுவாக, வெளியிடப்பட்டு, 02.01.2019 அன்று பொது விசாரணை தேனாம்பேட்டை மாநகராட்சி சமூக நலக் கூடத்தில் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் எழுப்பப்பட்ட ஆட்சேபனைகளின் மீதான குறிப்புரைகள் செய்தித்துறையால் வழங்கப்பட்டது. குடும்பங்கள் இடம் பெயர வேண்டிய நிலை இல்லாததால் சமூகத் தாக்க திட்ட அறிக்கை  தயாரிப்பதற்கான கேள்வி எழவில்லை எனவும், சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகள் ஏதும் இல்லாததால்,

சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த மதிப்பீடு செய்ய வேண்டிய தேவை எழவில்லை என சமூக தாக்க மதிப்பீட்டு முகமையகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. சமூக தாக்க மதிப்பீட்டு முகமையாக்கத்தால் 21.03.2019 அன்று சமர்ப்பிக்கப்பட்ட 2 இறுதி சமூக தாக்க மதிப்பீட்டு அறிக்கையின் மீது நிபுணர் குழு தனது குறிப்புரையை 27.03.2019 அன்று வழங்கியது, இறுதி சமூக தாக்க மதிப்பீட்டு அறிக்கை மற்றும் நிபுணர் குழுவின் குறிப்புரை அரசிதழிலும், போயஸ் கார்டன் பகுதியிலும் வெளியிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, வேதா நிலையம் இல்லத்தை அரசு நினைவில்லமாக மாற்றுதல் தொடர்பாக தென் சென்னை வருவாய் கோட்டத்தின் நில எடுப்பு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அவர்களால்,

நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவு மறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டத்தின் (மத்திய சட்டம் 30/2013) பிரிவு 11 (1)ன் படி, 28.06.2019 அன்று, முதல் நிலை அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நில எடுப்புச் சட்டத்தின் பிரிவு எண் 15 (1) மற்றும் (2) ஆகியவற்றின் படி, அறிவிக்கையின் மீது பெறப்பட்ட மறுப்புரைகள் குறித்த பரிந்துரைகள் மற்றும் நடவடிக்கைகளின் மீதான பதிவுறு ஆகியவை நில எடுப்பு அலுவலர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு, அம்மறுப்புரைகள் கவனமாகக் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு, நில எடுப்புச் சட்டத்தின் பிரிவு எண் 15 (3)-ன் கீழ் அம்மறுப்புரைகள் நிராகரிக்கப்பட்டு,

பிரிவு எண் 19 (1)-ன் கீழ், நில எடுப்பு செய்யப்படவுள்ள நிலம் பொதுப் பயன்பாட்டிற்கு தேவைப்படுவதாக விளம்பப்பட்டு, 22.01.2020 நாளிட்ட சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் நடவடிக்கையில், நில எடுப்புச் சட்டத்தின் பிரிவு எண் 19 (2)-ன் படி, மேற்கண்ட நில எடுப்பினால் பாதிப்புக்குள்ளாகும் குடும்பங்கள் எதுவும் இல்லை எனவும், அவர்களை அப்புறப்படுத்தவோ, மறு குடியமர்த்தவோ, மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவோ எந்த அவசியமும் எழவில்லை என்ற சுருக்கக் குறிப்புடன், மேற்கண்ட விளம்புகையை நில எடுப்பு அலுவலர் அவர்கள் வெளியிட ஆணையிடப்பட்டுள்ளது.

நில எடுப்புச் சட்டத்தின் பிரிவு 19(2)-ன் படி, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வுத் திட்டத்தின் சுருக்கத்துடன் பிரிவு எண் 19(1)ல் குறிப்பிடப்பட்டுள்ள விளம்புகையை உரிய அரசு/மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் ஒப்புதலளிக்கப்பட்டவாறும், பிரிவு எண் 19 (2)-ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, படிவம் ஏஐ விளம்புகையை நில எடுப்பு அலுவலர்/வருவாய் கோட்ட அலுவலர் அவர்களால் ஒப்புதலளிக்கப்பட்டவாறும், சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடமிருந்து பெறப்பட்ட விளம்புகைகளுக்கு ஒப்புதல் அளித்தும், இந்த விளம்புகைகளை (னுநஉடயசயவiடிளே) தமிழ்நாடு அரசிதழிலும் (சிறப்பு வெளியீடு), இரு நாளிதழ்களிலும் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) மற்றும் நில எடுப்பு சட்டத்தின் பிரிவு 19(4)-ல் தெரிவிக்கப்பட்டுள்ள வெளியீட்டு முறைகளிலும் வெளியிட அனுமதித்தும் ஆணை வெளியிடப்பட்டு, 3 அவ்விளம்புகைகள் இரண்டு நாளிதழ்களிலும், தமிழ்நாடு அரசிதழிலும் (சிறப்பு வெளியீடு) 06.05.2020 அன்று வெளியிடப்பட்டுள்ளன. மேலும், சென்னை, போயஸ் தோட்டத்தில் அமைந்துள்ள  வேதா நிலையம் இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்றுதல் தொடர்பாக,

தோராய தீர்ப்பாணைத் தொகையான ரூ.67,16,61,225/-க்கு (ரூபாய் அறுபத்தேழு கோடியே பதினாறு இலட்சத்து அறுபத்தோராயிரத்து இருநூற்று இருபத்தைந்து மட்டும்)க்கு நிதியொப்பளிப்பு செய்து அரசாணை 26.05.2020 அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும், மேற்கண்ட பொருள் தொடர்பாக, புகழேந்தி என்பவரால் தொடரப்பட்ட வழக்கில் 27.05.2020 அன்று கீழ்க்கண்டவாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வேதா நிலையம் இல்லத்தை கையகப்படுத்தி அரசு நினைவிடமாக மாற்றுவதற்கு பொதுமக்களின் வரிப்பணம் அதிகம் செலவிடுவதை கருதி, அதனை தவிர்ப்பதற்கு அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.·

வேதா நிலையம் இல்லத்தை முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகமாக மாற்றுவது குறித்து பரிசீலிக்கலாம். வேதா நிலையம் இல்லத்தின் ஒரு பகுதியை நினைவு இல்லமாகவும், மற்றொரு பகுதியை முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகமாக மாற்றுவது குறித்தும் பரிசீலிக்கலாம். நில எடுப்பு சட்டத்தின்படி, 12ரூ என்ற விகிதத்தில் கூடுதல் சந்தை மதிப்பு சேர்த்து, மொத்த இழப்பீடு தொகை ரூ.67,88,59,690/- என கணக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், தோராய தீர்ப்பாணைத் தொகையாக ரூ.67,16,61,225/-க்கு நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளதைத் தொடந்து,

மீத இழப்பீட்டு தொகையான ரூ.71,98,465/-க்கு ஒப்புதல் வழங்கி மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்தும், உரிய தீர்ப்பாணை வெளியிட சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு முன்அனுமதி வழங்கியும் 16.07.2020 அன்று ஆணை வெளியிடப்பட்டது. வேதா நிலையம் இல்லம், அவ்வில்லம் அமைந்துள்ள நிலம் மற்றும் அங்குள்ள அன்னார் பொருட்களை பராமரிக்கவும், நிருவகிக்கவும் ஜெ. ஜெயலலிதா அறநிறுவனத்திற்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


Tags : Veda House ,land ,Annar ,Charitable Trust , Vedha House, Annar Product, J. Foundation
× RELATED தனியார் தோட்ட வன நிலம் ஆக்கிரமிக்க...